தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்

விழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-07 16:26 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பிடாகத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் வளவனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பாச்சனூரை சேர்ந்த மஞ்சுளா, ராதா ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலா ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் வாங்கிய கடனுக்கு 6 மாதம் தவணை தொகை செலுத்தினர். 7-வது மாத தவணை தொகையை சதீஷ்குமார், வசூல் செய்ய சென்றபோது அழகேசன், மஞ்சுளா, ராதா, மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ்குமாரின் அண்ணன் கலைவாணன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அழகேசன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்