பள்ளி மாணவன் மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-31 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சடையன்கிணறு காலனி கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் யோகேஷ் அரவிந்த் (வயது 15). இவன் சாத்தான்குளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம்தேதி அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சடையன்கிணறு காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவரை அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த யோகேஷ் அரவிந்த் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்த புகரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்