ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல் தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
கண்டாச்சிமங்கலம்
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(வயது 38). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம்(39) என்பவருக்கும் நில பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வம் பொக்கலைன் எந்திரம் மூலம் ராமு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தை இடித்தும், நில அளவைக்கல் மற்றும் முள் வேலி ஆகியவற்றை பிடுங்கி நாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட ராமுவை செல்வம், இவரது மனைவி விமலா(35), செல்வத்தின் மாமனார் மன்மதன்(60) ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டி, தாக்கி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமு கொடுத்த புகாரின் பேரில் செல்வம் உள்பட 3 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.