திருக்கோவிலூர் அருகேஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மீது தாக்குதல் :அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு
திருக்கோவிலூர் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மீது தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கொணக்கலவாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45). தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது மனைவி ரஜினி (40). இவர், அதே ஊரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கிறார்.
இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான செந்தில்குமார் (37) என்பவர், பழைய 'பில்' ஒன்றில் கையெழுத்து போடுமாறு ரஜினியிடம் தெரிவித்து, கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு துணைத் தலைவர் ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த குப்புசாமி செந்தில்குமாரிடம் சென்று க விளக்கம் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் ரஜினியின் கணவர் குப்புசாமியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்