மூதாட்டி மீது தாக்குதல்

சாத்தான்குளத்தில் மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-12-29 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஆர்.சி.வடக்குதெருவை சேர்ந்தவர் அருளப்பன் மனைவி மாரியம்மாள் (வயது 62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செபஸ்டியான் மகன் அந்தோணிராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பிரச்சினைக்குரிய இடத்தில் அந்தோணிராஜ், கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனையறிந்த மாரியம்மாளின் மகன்கள் புஷ்பராஜ், சிலுவைஅந்தோணி ஆகியோர் தடுத்துவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்தோணிராஜ் மீது போலீசில் புகார் அளிக்க மாரியம்மாள் சென்றார். சாத்தான்குளம் தெப்பக்குளம் பகுதியில் சென்றபோது அந்தோணிராஜ், அவரது மனைவி செல்வகனி, மகன்கள் கிருபாகரன், ஜெபஸ்டியான் கதிர்வேல் ஆகிய 4 பேரும் வழிமறித்து மாரியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்தபுகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ் உள்ளிட்ட 4 பேரையும் தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்