காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

வடமதுரை அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-02-28 13:46 GMT

வடமதுரை அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 42). இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேடசந்தூர் தொகுதி செய்தி தொடர்பாளராக உள்ளார். இவருக்கும், மோர்பட்டியை சேர்ந்த ராகுலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணசாமி, வடமதுரையில் இருந்து சித்துவார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோர்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் அருகே அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ராகுல், அவருடைய நண்பர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கிருஷ்ணசாமியை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயம் அடைந்த கிருஷ்ணசாமிக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசில் கிருஷ்ணசாமி புகார் செய்தார். அதன்பேரில் ராகுல், ராஜேஷ்கண்ணன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்