வழக்கை வாபஸ் பெறக்கோரி பொக்லைன் டிரைவர் மீது தாக்குதல்

வழக்கை வாபஸ் பெறக்கோரி பொக்லைன் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2023-06-18 19:15 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார், பொக்லைன் டிரைவர். இவருடைய தம்பி மகனை அதே ஊரை சேர்ந்த ஸ்டாலின், லிபின் மற்றும் 5 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கோபகுமார் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோபகுமாரை ஸ்டாலின், லிபின் உள்பட 7 பேர் வழிமறித்து, வழக்கை வாபஸ் பெறக்கூறி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ஸ்டாலின் மற்றும் லிபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்