வாங்கிய பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்
வாங்கிய பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.;
கிருஷ்ணகிரி ராமதாஸ் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 34). அதேபகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் பணிபுரிபவர் வெங்கடாசலபதி (34). கடந்த, 1-ந் தேதி பார்த்திபன் கடைக்கு வந்த 4 பேர் பீடி வாங்கி உள்ளனர். அதற்கு பணம் கேட்ட வெங்கடாசலபதியை மிரட்டி அடித்தனர். இதுகுறித்து தட்டிகேட்ட கடை உரிமையாளர் பார்த்திபனையும் சோடா பாட்டிலால் தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடாசலபதி, பார்த்திபன் 2 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வெங்கடாசலபதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.