போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை செய்ய முயற்சி

போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை செய்ய முயற்சி

Update: 2022-10-13 18:45 GMT

கோட்டூர் அருகே போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை செய்ய முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்கி பணம் பறிப்பு

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பட்டிமார் கிராமத்தை சேர்ந்தவர் பெர்னாண்டஸ்(வயது 41). இவர் நேற்று முன்தினம் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து பட்டிமார் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பாலையூர் என்ற இடத்தில் சென்றபோது மர்ம கும்பல் பெர்னாண்டஸ் ஓட்டிச்ெசன்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை தாக்கியதுடன் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் எடுத்துச்சென்று விட்டனர்.

ஏட்டுவை கொலை செய்ய முயற்சி

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த தனிப்பிரிவு ஏட்டு சூர்யா(47), பெர்னாண்டசை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து விட்டு, அசேஷத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பாலையூர் என்ற இடத்தில் சென்றபோது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் தனிப்பிரிவு ஏட்டு சூர்யாவை கல் மற்றும் கட்டையால் தாக்கியதுடன் அவரை கொலை செய்ய முயன்றனர். அந்த மர்ம கும்பலிடம் இருந்து ஏட்டு சூர்யா தப்பித்துசென்றார்.

6 பேர் கைது

மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சூர்யாவை அவரது உறவினர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து சூர்யாவை தாக்கி கொலை செய்ய முயன்ற பாலையூர் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம்(33), அசோக்குமார்(30), ராஜேஸ்வரன்(24), லெனின்(43), சோமசுந்தரம்(38) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மணிமாறன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் ஏட்டை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்