பா.ஜனதா ஒன்றிய துணைத்தலைவி மீது தாக்குதல்
மூன்றடைப்பு அருகே பா.ஜனதா ஒன்றிய துணைத்தலைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகிலுள்ள பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணைத்தலைவர் சந்திரலேகா (வயது 34) மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சந்திரலேகாவை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.