கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

காவேரிப்பட்டணம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதை; தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-03 18:45 GMT

காவேரிப்பட்டணம்

சூளகிரி அருகே உள்ள தர்மராஜகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் ஹரீஷ்குமார் (வயது 30). இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு காரில் சூளகிரிக்கு திரும்பி கொண்டிருந்தார். கே.ஆர்.பி. அணை ஜங்ஷன் சாலையில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் கார் மோதியது. இதை ஹரீஷ்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களிடம் தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் 2 பேரும் காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் ஹரீஷ்குமாரை அந்த நபர்கள் 2 பேரும் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஹரீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்