சென்னை: கே.கே.நகர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
சென்னை கே.கே. நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
சென்னை,
சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
கல்லை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது.
கொள்ளை முயற்சியின் போது ஆந்திராவில் உள்ள ஏடிஎம் கட்டுப்பாட்டு மையத்தில் அலாரம் ஒலித்ததால் உடனடியாக சென்னை போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்த உடன் கேகே நகர் ஏடிஎம் மையத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததாலும், கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததாலும் போலீசார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.