உலகளந்த பெருமாள் கோவிலில் அத்தியாயன உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் அத்தியாயன உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2023-01-23 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ புஷ்பவல்லிதாயார் தேகளீசபெருமாள் அத்தியாயன உற்சவம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து திருமஞ்சன ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிறைவாக கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் சாமிக்கு சாற்று மறை உற்சவம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் ஏஜெண்ட் கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்