வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில்அங்கபிரதட்சணம் செய்து பெண்கள் வழிபாடு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பெண்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தினர்.

Update: 2023-04-21 18:45 GMT

வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை, சேறுபூசுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்காக காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவிழா நேரத்தில் கூட்ட நெரிசலில் அங்கபிரதட்சணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் நேற்று முதல் பெண்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்