தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

உலக புத்தக தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, டாக்டர் மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடந்தது. முகாமுக்கு தூத்துக்குடி அரிமா சங்க வட்டார தலைவர் ஜே.சுரேஷ் தங்கராயப்பன் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலாளர் பி.எஸ்.எஸ்.ஜி.திவாகர் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மா.ராமசங்கர் வரவேற்று பேசினார். செய்யது முகம்மது ஷெரீப் பேசினார். முகாமில் 60-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொண்டனர். நூலகர் ஜெ.லதா மற்றும் வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் 2-ம் நிலை நூலகர் கொ.சங்கரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்