தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை 2-வது ரெயில்வே கேட் மூடல்
தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை 2-வது ரெயில்வே கேட் மூடப்படுவதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.;
மதுரை-தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பகுதி பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் வரையிலான பணிகள் நடந்து வருகிறது. இதில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 2-ம் கேட் பகுதியில் ரெயில் பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதனால் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2-வது ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே முதுநிலை மேலாளர் தங்கவேலு அறிவித்து உள்ளார்.