திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதிதாக 48 கடைகள்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதிதாக 48 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

Update: 2023-09-01 19:26 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புதிதாக 48 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

புதிய கடைகள்

திருப்பத்தூர் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சீர்மிகுநகரம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு 47 கடைகள், ஒரு ஓட்டல், மற்றும் இருசக்கர வாகன நிறுத்தம், கட்டண கழிப்பறை கட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடைகள் சம்பந்தமாக பழைய வியாபாரிகள் தங்களுக்கே கடை ஒதுக்க வேண்டும் எனவும் மற்றொரு தரப்பினர் பொது ஏலம் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 24-ந் தேதி ஏலம் அறிவிக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது.

அமைச்சர் திறந்து வைத்தார்

அதனை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அனைத்து கடைகளையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, பஸ் நிலைய கடைகளை சீரமைக்கும் பெயரில் வணிக வளாகங்களாக மாற்றி விடாமல் பஸ் நிலையத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த கடைகள் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 150 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலாராணிநாராயணன் தலைமை தாங்கினார்.

திட்ட இயக்குனர் சிவராமன், துணைத் தலைவர் கான்முகமது, பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர செயலாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் உதய சண்முகம், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி ஹரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்