திருமண விழாவில்மணமகனுக்கு கொலைமிரட்டல்

தூத்துக்குடியில் திருமண விழாவில் மணமகனுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-15 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் சூடாமணி (வயது 50). இவருடைய சகோதரியின் மகன் செண்பகராஜ் என்பவருக்கு முத்தையாபுரத்திலுள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த முத்தையாபுரம் குமாரசாமிநகர் 2-வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (42) என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மணமகனின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்,

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அல்லிஅரசன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைதுசெய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்