மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்அரசுப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

Update: 2023-07-08 20:46 GMT


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

போட்டி தேர்வுகள்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-1,2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துறை சார் வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

பதிவு செய்யும் முறை

கட்டணமில்லாத இந்த பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்டhttps://tamilnaduc areerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வகுப்புகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடத்தப்படும்.

இங்குள்ள நூலகத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளன. எனவே, இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் எண் அட்டை நகல் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு முறை பதிவு செய்த நகல் ஆகியவற்றுடன் புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் என்று துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்