தகட்டூரில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி
நினைவு தினத்தையொட்டி தகட்டூரில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் தலைமையில் நடந்தது
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் தி.மு.க. மாவட்ட விவசாய அணி சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட விவசாய அணி அமைப்பாளருமான பழனியப்பன் தலைமையில் தி.மு.க.வினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பிரதிநிதி வீரமணிகண்டன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பழனியப்பன், கிளை செயலாளர்கள் செந்தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியன், ரவீந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் வைத்தீஸ்வரன், சேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.