புனித சூசையப்பர் ஆலயத்தில்சிறப்பு பிரார்த்தனை
கோவில்பட்டி புனித சூசையப்பர்ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கோவில்பட்டி:
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், அந்தமாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப மத்்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் அகில இந்திய கத்தோலிக்க பெண்கள் பணிக்குழு சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து பெண்கள் பணிக்குழு சார்பில் ஆலய வளாகத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.