தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குஸ்கேட்டிங் போட்டி பரிசளிப்பு விழா

தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

Update: 2023-10-16 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி, ராஜ் யோகா, ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தென்மாவட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு ராஜ் யோகா, ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் கண்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவில் 4 வயது முதல் 6 வயது வரை, 7 - 9, 10 - 12, 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர், மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகள் என இரு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சங்கரன்கோவில் ஸ்கேட்டிங் கழக அகாதெமி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்