சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,100-க்கு ஏலம்

கனகாம்பரம்

Update: 2022-11-02 19:30 GMT

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,100-க்கு ஏலம் போனது.

பூ மார்க்கெட்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கனகாம்பரம் கிலோ ரூ.1,100

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.455-க்கும், முல்லை ரூ.300-க்கும், காக்கடா ரூ.150-க்கும், செண்டுமல்லி ரூ.98-க்கும், பட்டுப்பூ ரூ.70-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,100-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.472-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.68-க்கும், பட்டுப்பூ ரூ.67-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.940-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களை விட கனகாம்பரம் பூ அதிக விலைக்கு விற்பனை ஆனது.

வரத்து குறைந்துவிட்டது

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு பெரும்பாலான கனகாம்பரம் பூ செடிகள் அழுகிவிட்டன. எஞ்சி உள்ள செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கனகாம்பரம் பூக்கள் வரத்து குறைந்துவிட்டது. அதே வேளையில் கனகாம்பரம் பூக்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு கனகாம்பரம் பூக்களை ஏலம் எடுக்கிறார்கள். இதன்காரணமாக கனகாம்பரம் பூக்கள் மட்டும் விலை உயர்ந்து விற்பனை ஆகிறது,' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்