சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் நிழற்கூடைமேற்கூரை இடிந்து விழுந்து பயணி காயம்

சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் நிழற்கூடைமேற்கூரை இடிந்து விழுந்து பயணி காயம் அடைந்தார்.

Update: 2022-11-28 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் நேற்று பெய்தது. அப்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள நிழற்கூடையில் பல பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் மதியம் 12.30 மணி அளவில் நிழற்கூடையின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்த ஆத்திக்காடு தேவதாஸ் மகன் ஜெயராஜ் என்பவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த சக பயணிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்