சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொட்டகையின் தகரம் சரிந்து விழுந்தது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொட்டகையின் தகரம் சரிந்து விழுந்தது.

Update: 2022-07-12 21:24 GMT

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவிலின் தெற்கு ரதவீதியில் தகரத்தால் கொட்டகை போடப்பட்டு உள்ளது. நேற்றிரவு அடித்த காற்றின் வேகத்தால் அந்த கொட்டகையின் ஒரு தகரம் சரிந்து கீழே விழுந்தது. அப்பகுதியில் இரு புறங்களிலும் பெண்கள் பூ விற்பது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூக்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் செல்வார்கள். இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதிர்ஷ்டவசமாக நேற்றிரவு பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்