மணப்பாடு கடற்கரையில் உலக மீனவர் தின விழா

மணப்பாடு கடற்கரையில் உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-21 18:45 GMT

உடன்குடி:

மணப்பாடு புனித யாகப்பர் ஆலய பங்கு மற்றும் தூய ஆவி ஆலய பங்கு மக்கள் சார்ரபில் உலக மீனவர் தினவிழா கடற்கரை வளாகத்தில் நடைபெற்றது.

வட்டார முதன்மை குரு ஜான்செல்வம் தலைமை வகித்து மீனவர்களின் பாரம்பரிய பெருமைகள், கலாசாரம், ஒற்றுமையாக வாழ்தல் குறித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற திருப்பலி கலைநிகழ்ச்சிகள், மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பங்குத்தந்தையர்கள் லெரின்டிரோஸ், மனோ, இக்னேஷியஸ் அமல்ராஜ், மணப்பாடு ஊர்நலக்கமிட்டி தலைவர் மத்தேயு, ஆலயப்பங்குத்தந்தைகள் திபூர்சியான் (யாகப்பர் ஆலயம்) சந்திரா (தூய ஆவி ஆலயம்) மணப்பாடு ஊராட்சி மன்றத் தலைவி கிரேன்சிட்டா வினோ, மணப்பாடு மீனவர் கூட்டுறவு தலைவர் ஜெரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் லெபோரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மீன்பிடித் தொழிலுக்கு முன்பு பயன்படுத்திய படகு, வலை மற்றும் பொருட்கள் கண்காட்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவில் ஏரளான ஊர்மக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்