மானங்காத்தான் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை உதவி கலெக்டர் ஆய்வு
மானங்காத்தான் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்தான் கிராமத்தில் 1984-ம்ஆண்டு கட்டப்பட்ட கீழக்காலனியில் 61 தொகுப்பு வீடுகளும், மேலக்காலனியில் 25 தொகுப்பு வீடுகளும் கட்டப்பட்டன. இந்த வீடுகள் தற்போது பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. இவ்வீடுகளை மாற்றிவிட்டு புதிதாக வீடுகட்டி கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த வீடுகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு பரிந்துரை செய்தனர். அவரது உத்தரவின் பேரில், கோவில்பட்டி உதவி கலெக்டர் மாகலட்சுமி அந்த வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்புலட்சுமி, தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, உதவி அலுவலர் ஐயப்பன், ஊராட்சி செயலர் சக்கம்மாள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த காலணி மக்களுக்கு 3 மாதங்களுக்குள் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் தெரிவித்தார்.