மலைக்கோவிலூரில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மலைக்கோவிலூரில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-15 18:53 GMT

அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம் சார்பில் மலைக்கோவிலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, கியாஸ் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்தால் எப்படி அணைப்பது? ஆற்றில் யாரேனும் மூழ்கினால் அவர்களை எப்படி மீட்பது? தீ விபத்தில் யாராவது சிக்கி கொண்டால் எவ்வாறு அவர்களை காப்பாற்றுவது? என்பன உள்பட பல்வேறு ஒத்திகையில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இதில், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மலைக்கோவிலூர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்