கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

1-வது உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.;

Update:2023-10-07 02:42 IST

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முதலாவது அணு உலையில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று மதியம் 12.30 மணியளவில் அந்த அணுஉலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

உடனே, உணுஉலையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் 2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்