ஜக்கம்பட்டி அங்கன்வாடி மையத்தில்கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு

Update: 2023-09-06 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கோடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜக்கம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் பற்றிய விவரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் அங்கன்வாடி நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளிடம் கலெக்டர் நலம் விசாரித்தார். இந்த ஆய்வின் போது ஏரியூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அகமதுஷா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்