கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-23 18:45 GMT

கயத்தாறு:

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

உயர்கல்வி

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழிகாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்து நாடார் உறவின்முறை சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.டி.காளிராஜன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ராம்குமார், பள்ளி ஆட்சி மன்ற குழு தலைவர் சேட்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் செல்வகணேஷ் தொடக்க உரையாற்றினார். சென்னை ஆடிட்டர் பேச்சிக்கண்ணன் 'உன்னால் முடியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மருத்துவ படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து ராமநாதபுரம் டாக்டர் கார்த்திக் விளக்கி கூறினார்.

கல்வியாளர்கள் விளக்கம்

உயர்கல்வி பயிலுவதற்கு வங்கி கடன் பெறுவது குறித்து கயத்தாறு கனரா வங்கி மேலாளர் மஞ்சுளா பேசினார். சான்றோர் பள்ளிக்கூட முன்னாள் நிர்வாகி அழகுராஜன் வாழ்த்தி பேசினார். மேலும் பல்வேறு துறைகளுக்கான உயர்படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து கல்வியாளர்கள் விளக்கி கூறினர். மேலும் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் மகாராஜன், முத்துலட்சுமி, அருணாசலம், கண்ணன், புஷ்பகணேஷ், சிவக்குமார், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க தலைவரும், நாசரேத் பள்ளி தலைமை ஆசிரியருமான சுபசிங் ரத்தினகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்