எட்டயபுரம் கோவிலில் திருவிளக்கு பூஜை
எட்டயபுரம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி திருக்குறிப்புத் தொண்டர் நாயனார், பாண்டிய வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட புது அம்மன் கோவில் கொடை விழா நடந்தது நேற்று மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து எட்டயபுரம் ஆன்மிக சொற்பொழிவாளர் உலகநாதன் தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு விபூதி, குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.