ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு
ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் இறந்தாா்
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் தொட்டிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெயிண்டரான ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்ற ரமேஷ் (42) என்பதும், இவர் குடிபோதையில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.