ஈரோட்டில்கழிவு நீர் வாகன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஈரோட்டில் கழிவு நீர் வாகன பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது

Update: 2023-08-11 21:23 GMT

ஈரோடு மாநகராட்சியின் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவு நீர் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஈரோட்டில் நடைபெற்றது. முகாமிற்கு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநகர பொறியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கழிவு நீர் மேலாண்மை விதிகள், வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு உபகரணங்களோடு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்து விளக்கம் அளித்தார். இதில் மாநகராட்சி கழிவு நீர் மேலாண்மை பணியாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், தனியார் வாகன உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்