ஈரோட்டில்6½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
6½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது ெசய்யப்பட்டாா
ஈரோடு காவிரிரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 6½ கிலோ கஞ்சா ெபாட்டலம் மோட்டார்சைக்கிளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சேலம் மாவட்டம் வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 41) என்பதும், அவர் சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.