ஈரோட்டில்புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

ஈரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-08-24 21:04 GMT

ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி மற்றும் போலீசார் கொங்காலம்மன் கோவில் வீதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரான ஈரோடு ராமசாமி வீதியில் வசித்து வரும் தரராம் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 770 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு சத்தி ரோடு பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மொடக்குறிச்சி அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த மணி (59) என்பவரை டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 40 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்