ஈரோட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-10-13 07:31 IST

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக சென்று காலிங்கராயன் இல்லத்தில் நிறைவுெபற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் வினய்குமார் மீனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் சிவகுமார், விநாயகம், உதவி நிர்வாக பொறியாளர் விஜய்குமார், துணை நிலநீர் வல்லுனர் துரைசாமி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்