திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் விடிய, விடிய அலைமோதிய கூட்டம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் விடிய, விடிய கூட்டம் அலைமோதியது.

Update: 2023-09-28 21:41 GMT

தொடர் விடுமுறை

தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் உள்ளிட்ட நாட்களில் மத்திய பஸ்நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் நேற்று முன்தினத்துடன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல்பருவதேர்வு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று மிலாதுநபி, திங்கட்கிழமை காந்திஜெயந்தி என்று தொடர்ந்து விடுமுறை வருகிறது.

அலைமோதிய மக்கள்

தொடர் விடுமுறையை என்பதாலும், காலாண்டு விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலையே திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு புறப்பட்டு வந்தனர். இதனால் மாலை 6 மணி முதல் பஸ்நிலையம் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பஸ்களில் இடம்பிடிக்க பயணிகள் முட்டி மோதிக்கொண்டனர். இதுதவிர, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சிக்கு வந்தனர். இதனால் அதிகாலை வரை அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

நிரம்பி வழிந்தன

ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பஸ் நிலையமும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று பகலிலும், இரவிலும் பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்