சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

Update: 2023-09-30 09:26 GMT

பெருந்துறை

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

கால்நடை சந்தை

பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்நடை சந்தை கூடுகிறது. அதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு, கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இதேபோல், சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

ரூ.1½கோடிக்கு விற்பனை

இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது. முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது.

சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக்குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்