ஆறுமுகநேரி பஜாரில்கார் விபத்தால் மின்தடை
ஆறுமுகநேரி பஜாரில் கார் விபத்தால் மின்தடை ஏற்பட்டது.
ஆறுமுகநேரி:
ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நேற்று கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4மணியளவில் ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு விலக்கிற்கு எதிரே எதிர்பாராத விதமாக அந்த கார் சாலைஓரத்திலுள்ள 2மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி மின்சார வாரிய உதவி பொறியாளர் ஜெபசாம் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரை அகற்றி சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை நடவு செய்து, சில மணி நேரத்தில் சம்பவம் நடந்த இடத்தை தவிர மற்ற பகுதிகளுக்கு மின் வசதி செய்து கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் நேற்று மாலையில் மின்சார சப்ளை கொடுக்கப்பட்டது.