அந்தியூர் ஒழுங்குமுறை கூடத்தில்ரூ.30¾ லட்சத்துக்கு துவரை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.30¾ லட்சத்துக்கு துவரை விற்பனையானது.

Update: 2023-02-09 21:15 GMT

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30¾ லட்சத்துக்கு துவரை விற்பனை நடைபெற்றது.

துவரை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. துவரை 669 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 4 ஆயிரத்து 789 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 7 ஆயிரத்து 719 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 30 லட்சத்து 76 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனையானது.

தேங்காய்

2309 தேங்காய் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 69 காசுக்கும், அதிக பட்சமாக 26 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் 34 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய் 35 மூட்டை கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 569 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 8 ஆயிரத்து 369 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்பனையானது.

நரிப்பயிர்

நரிப்பயிர் 7 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 8 ஆயிரத்து 169 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 9 ஆயிரத்து 919 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 53 ஆயிரத்து 187 ரூபாய்க்கு விற்பனையானது.

கொள்ளு 4 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 57 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலையாக 66 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 14 ஆயிரத்து 994 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்