ஆனைமலை நெல் கொள்முதல் மையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுமா?-விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலை நெல் கொள்முதல் மையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2022-10-10 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை நெல் கொள்முதல் மையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கொள்முதல் மையம்

ஆனைமலை தாலுகாவில் காக்கா கொத்தி பாறை, வடக்கலூர் அம்மன் கோவில், குழப்பத்து குளம் போன்ற பகுதிகளில் முதல் பாகத்தில் கோ 50 ஏ.எல்.டி மற்றும் ஏ.எல்.ஆர்.டி உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பருவத்தை எட்டி உள்ள நிலையில் தீவிரமாக அறுவடை பணி நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. அதில் 17 சதவீதத்திற்கும் உள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது.

நெல் கொள்முதல் மையத்தில் நாள் ஒன்றிக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மற்ற நெல் மூட்டைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

போதிய இடவசதி இல்லை

அதனால் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை ஆனைமலை கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆனைமலை பகுதியில் 2000 மூட்டைக்கு மேல் நெல் அறுவடை செய்து நெல் கொள்முதல் மையத்திற்கு வருகிறது. ஆனால் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் 1200 மூட்டைக்கு மேல் நெல் தேங்குகிறது. நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் கீழ் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயத்துள்ளது. அதற்காக ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 12 உலர் கலங்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. நெல்லின் வரவு அதிகமாக இருப்பதால் நெல்லை உலர வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. மேலும் பருவமழை தற்போது பெய்வதால் நெல்லை பாதுகாக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. தினசரி 1500 மூட்டை முதல் 2000 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்