ரூ.15¾ லட்சத்தில் உதவி பொறியாளர் அலுவலகம்

மாடப்பள்ளி ஊராட்சியில் ரூ.15¾ லட்சத்தில் உதவி பொறியாளர் அலுவலகத்தை நல்லதம்பி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-09-07 18:28 GMT

திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி, மடவாளம் மின் பிரிவுக்கு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ15 லட்சத்து 80 ஆயிரத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆர்.ராமலிங்கம் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் ஜி.அருள் பாண்டியன், சம்பத் (பொது) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் நித்யா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், கவுன்சிலர் கஸ்தூரி ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், முஸ்தபா நன்றி கூறினார்கள்.

இதேபோன்று செலந்தம்பள்ளி ஊராட்சி, மாடப்பள்ளி வேட்டையான் வட்டம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி சரவணன் தலைமை வகித்தார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 1,000 வீடுகளுக்கு சீரார மீன் வினியோகம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்