வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

பென்னாத்தூரில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு ெசய்தார்.

Update: 2022-07-07 16:44 GMT

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய் ஆய்வு மேற்கொண்டார். இதில் வீடுகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் முறை குறித்து கேட்டறிந்து, அதனை எவ்வாறு மதிப்பீடு செய்து வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து அல்லிவரம் கிராமத்தில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பென்னாத்தூர் காமராஜர் குடியிருப்பு பகுதியில் நடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதுப்பிக்கும் பணி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், துணைத் தலைவர் ஜீவசத்தியராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்