முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு
வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
கடந்த அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் மீது ஏற்கெனவே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, கடந்த 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது ரூ.33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058சதவிதம் அதிகம்) சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.