வாலிபர் மீது தாக்குதல்
ஆலங்குளம் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த பூசத்துரை (27) என்பவர் நடந்து சென்றபோது, அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் மீது லேசாக உரசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலா (21), பத்திரகாளி (21) உள்பட 4 பேர் பூசத்துரையை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.