ரேசன்கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்

ரேசன்கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்

Update: 2023-07-30 18:45 GMT

கணபதி

கணபதியில் ரேஷன் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரேஷன் கடை ஊழியர்

கோவை கவுண்டம்பாளையம் மகாராஜா அவென்யூவை சேர்ந்தவர் குமரன் (வயது58). இவர் கோவை கணபதி மாமரத் தோட்டத்தில் உள்ள அமுதம் அங்காடி ரேஷன் கடையில் பில் போடும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர், நேற்றுமுன்தினம் மாலை கடையில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் திடீரென்று முருகனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி இரும்புக்கம்பியால் முருகனை சரமாரியாக தாக்கினார். இதில் முருகனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் வலியால் துடித்தார்.

கொைல முயற்சி

உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து முருகனை அங்கிருந் தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், முருகனை இரும்புக் கம்பியால் தாக்கியது கவுண்டம் பாளையம் அசோக்நகரை சேர்ந்த தொழிலாளி ஜெயராஜ் (வயது46) என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஜெயராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரேஷன் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்