ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே சத்யாநகரை சேர்ந்த குமார் (வயது 52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி லெட்சுமிபுரம் பகுதிக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது செம்மறிக்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற கூலித் தொழிலாளி வழிமறித்துள்ளார். அவர் குமாரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கியுள்ளார். மேலும் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.