தொகுதியில் சுற்றுப்பயணம்:டீக்கடையில் அமர்ந்து பொதுமக்களிடம்குறைகள் கேட்ட எடப்பாடி பழனிசாமி

Update: 2023-08-27 19:47 GMT

எடப்பாடி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியான எடப்பாடி முழுவதும் கடந்த 4 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை எடப்பாடியை அடுத்த கன்னங்காடு, ஆவணியூர், மோட்டூர் பிரிவுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஆவணியூர் கிராமத்தில் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். அங்கிருந்தவர்களிடம் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியுடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்