சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு
சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடந்தது.
புன்னம் பகுதியில் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காலபைரவருக்கு பங்குனி மாத அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர், திருக்காடுதுறை, நத்தமேடு மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.